சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நாராயண்பூர் பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்களான சர்வ் ஆதிவாசி சமாஜ் சமூகத்தை சார்ந்தவர்கள் புதிய விதிமுறை ஒன்றை கொண்டு வந்துள்ளனர். அதன்படி இவர்கள் சமூகத்தை சார்ந்தவர்கள் வேற்று சமூகத்தை சார்ந்தவர்களை திருமணம் செய்தால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த விதிமுறை ஆண்களை விட பெண்களுக்கு கடுமையானதாக இருக்கும். ஏனென்றால் அவர்கள் வேற்று சமூகத்தை சார்ந்தவர்களை திருமணம் செய்து கொண்டால் இந்த சமூகத்தின் பழக்க வழக்கங்கள் கலாச்சாரங்களை அடியோடு கைவிட்டு விடுகின்றனர். மாற்று சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்துவிட்டு அபராதம் செலுத்தாமல் இருந்தால் அவர்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.