
பீகார் மாநிலத்தில் உள்ள சமாஸ்திபூர் பகுதியில் முகேஷ்ங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாக்ஷி என்ற 25 வயது மகள் இருந்துள்ளார். இந்த மாணவி கல்லூரியில் படித்து வரும் நிலையில் அவர் வீட்டின் அருகே உள்ள ஒரு வாலிபரும் அதே கல்லூரியில் படிக்கிறார்.
இதனால் இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் 4-ம் தேதி சாக்ஷி வீட்டை விட்டு வெளியேறி தன் காதலனை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் டெல்லியில் தனியாக வசித்து வந்த நிலையில் இந்த தகவல் முகேஷ் சிங்கிற்கு தெரியவந்த நிலையில் அவர் அங்கு சென்று தன்னுடைய மகளை வீட்டிற்கு அழைத்து சென்றார்.
இதைத் தொடர்ந்து வேறு ஜாதி பையனை எப்படி திருமணம் செய்யலாம் என்று கூறி தன் மகளை அவர் கோபத்தில் அடித்தே கொலை செய்தார். அவர் தன் மகளை கொலை செய்து பாத்ரூமில் வைத்து சடலத்தை பூட்டிவிட்ட நிலையில் பின்னர் எதுவும் தெரியாதது போல் இருந்தார்.
அவருடைய மனைவி தன்மகள் எங்கே என்று கேட்ட நிலையில் மீண்டும் அந்த வாலிபரோடு ஓடிவிட்டதாக அவர் கூறியுள்ளார். ஆனால் அவருடைய மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் வீட்டின் பாத்ரூமில் இருந்து திடீரென பயங்கர துர்நாற்றம் வீசியது. பின்னர் திறந்து பார்க்கும் போது பெண்ணின் சடலம் இருந்தது தெரிய வந்த நிலையில் முகேஷ் கைது செய்யப்பட்டார். அவர் கொலையை ஒப்புக்கொண்ட நிலையில் அவர் அந்த வாலிபரையும் கொலை செய்ய தேடிய நிலையில் அவர் கிடைக்காததால் வீட்டிற்கு திரும்பிவிட்டார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.