பெரும்பாலும் மக்கள் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணம் மிகவும் வசதியாக இருப்பதால் அதையே தேர்ந்தெடுக்கிறார்கள். இதன் காரணமாக ரயிலில் எப்போதுமே கூட்டம் நிரம்பி வழிகிறது. ரயிலின் முன்பதிவு செய்தால் படுத்துக்கொண்டே பயணிக்க முடியும். அதற்கு முன்பதிவு செய்வதும் எளிது. ஆனால் பயணத் திட்டத்தில் மாற்றம் ஏற்படும் போது பயணம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இது போன்ற நேரத்தில் டிக்கெட்டை கேன்சல் செய்து விடுகிறார்கள். ஆனால் அந்த முன்பதிவு டிக்கெட்டில் வேறு நபர் பயணிக்க முடியும்.  இதுபோல நமக்கே தெரியாத பல ரூல்ஸ் இருக்கிறது.

ந்தவகையி ரத்த சொந்தங்கள், அல்லது உறவினர்கள் தவிர வேறு யாருக்காவது ஆன்லைனில் ரயில் டிக்கெட் புக் செய்து கொடுத்தால் 3 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.10,000 அபராதம்  விதிக்கப்படும் என்று ரயில்வே சட்டம் திருத்தப்பட்டுள்ளது. ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதில் தொடர்ந்து பல மோசடிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனை தடுக்கும் விதமாக பிறருக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்து கொடுப்பது கட்டுப்படுத்தப்படுகிறது.