
கர்நாடக மாநிலம் பெங்களூரில் திலீப் (30)-மானசா (25) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் 5 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இவர்களுக்கு திருமணம் நடைபெற்ற போது மாப்பிள்ளைக்கு வரதட்சனை கொடுக்கப்பட்ட நிலையில் கூடுதல் வரதட்சனை கேட்டு தன் மனைவியை அவர் துன்புறுத்தியுள்ளார். இதற்கிடையில் திலீப் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்துள்ளார். இந்த விஷயம் அவருடைய மனைவிக்கு தெரிய வந்த நிலையில் கள்ளத்தொடர்பை கைவிடுமாறு பலமுறை கூறியுள்ளார். ஆனால் திலீப் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மானசா கோபித்துக் கொண்டு தன் தாயார் வீட்டிற்கு சென்ற நிலையில் பின்னர் குடும்பத்தினர் சமாதானம் செய்து கணவருடன் சேர்ந்து வாழுமாறு கூறி அனுப்பி வைத்தனர். இதேபோன்று நேற்று மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் கோபத்தில் மனசா ஒரு அறையில் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்வதை சமூக வலைதளத்தில் லைவில் காண்பித்துள்ளார். இது தொடர்பாக கணவன் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அதற்குள் மானசா தற்கொலை செய்து கொண்டார். மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.