தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டுவிழா மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் அந்த கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பிறப்பால் ஒரு தலைவர் உருவாகக்கூடாது மன்னராட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறியதற்காக என்னை பல சூழ்ச்சிகள் சூழ்ந்து கொண்டது‌. அந்த சமயத்தில் என்னை அழைத்தவர் விஜய். சினிமா துறையில் உச்சத்தில் இருந்த போதே அதனை துறந்து அரசியலுக்கு அவர் வந்துள்ளார். தளபதி என்ற நிலையிலிருந்து தலைவர் என்ற நிலைக்கு அவர் உயர்ந்துள்ளார். ஆளுங்கட்சிக்கு தூக்கத்தில் கூட இந்த கூட்டத்தை எப்படி அடக்குவது என்ற எண்ணம் தான் இருக்கிறது.

சினிமா துறையில் பல தொழில்களை இன்றைய அரசு நடத்தி வருகிறது. அப்படி இருக்கும்போது என் தலைவரை பார்த்து நடிகர் என்கிறார்கள். ஆனால் அவர்கள் தான் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார். அதன் பிறகு என் தலைவரை பார்த்து நீங்கள் ஏன் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதுவும் அவர் போடும் பேண்ட் சட்டையை கொஞ்சம் மாற்றி நடித்தால் கூட பரவாயில்லை. இதிலிருந்து ஒன்று தெரிகிறது.

முதல்வர் கூட ரசிகர் தான் என்று கூறினார். அதாவது ஏற்கனவே விஜயை பார்த்து முதல்வர் ஸ்டாலின் செல்ஃபி எடுத்துக் காப்பியடிப்பதாக கூறப்பட்ட நிலையில் அதன் பிறகு அவரை போன்று மேளம்  அடித்ததாக சமூக வலைதளத்தில் வீடியோ பரவியது. தற்போது விஜயை போன்று உடை அணிவதாக ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். மேலும் ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியின் போது இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த விஜயை தனக்கு பிடிக்கும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த நிலையில் அவரை கலாய்ப்பது போன்று ஆதவ் அர்ஜுனா முதல்வர் கூட விஜய் ரசிகர் என்று கூறியுள்ளார்.