தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் பாலிவுட் சினிமாவில் பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார். இது தமிழ் படமான தெறி படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தினை இயக்குனர் அட்லி மற்றும் அவருடைய மனைவி பிரியா ஆகியோர் தயாரிக்கிறார்கள். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது அபுதாபியில் நடைபெற்ற கார் ரேஸில் கலந்து கொண்டுள்ளார். ஏற்கனவே தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் படங்களில் நடிப்பதோடு கார் ரேசிலும் கலந்து கொண்டு வருகிறார்.

அதோடு புதிதாக கார் ரேஸ் கம்பெனி ஒன்றினையும் நிறுவியுள்ளார். தற்போது நடிகர் அஜித் வழியில் நடிகை கீர்த்தி சுரேஷும் கார் ரேஸில் கலந்து கொண்டுள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. மேலும் அவர் கார் ரேசில் கலந்து கொண்டது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அவருக்கு சக நடிகர் நடிகைகள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.