
நாட்டில் பிரதமர், அவருடைய இல்லத்தில் தங்கியுள்ள குடும்ப உறுப்பினர்கள், முன்னாள் பிரதமர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு உயர் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்த பாதுகாப்பு பணியில் எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை கமாண்டோ ஈடுபடுகிறது. கடந்த 1985 ஆம் ஆண்டு இந்த சிறப்பு பாதுகாப்பு படை அமைக்கப்பட்ட நிலையில் இவர்கள் பிரதமரின் பாதுகாப்புக்காக அவர்கள் எங்கு சென்றாலும் உடன் செல்வார்கள். இந்த சிறப்பு பாதுகாப்பு பணியில் துணை ராணுவ அதிகாரிகள், மாநில சிறப்பு போலீஸ் மற்றும் மத்திய போலீஸ் பிரிவில் சிறப்பாக பணியாற்றியவர்கள், மத்திய ஆயுதப்படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீசார் ஈடுபடுவார்கள்.
இந்நிலையில் தற்போது பிரதமர் மோடியின் பாதுகாப்பில் பெண் கமாண்டோ ஒருவர் ஈடுபட்டுள்ளார். முதல் முறையாக பாதுகாப்பு பணியில் ஒரு பெண் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் பிரதமருடன் செல்லும் போட்டோ வெளியே வந்துள்ளது. இந்த புகைப்படத்தை கங்கனா ரணாவத் x பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் சிறப்பு பாதுகாப்பு படையில் பெண் கமாண்டா நியமிக்கப்படும் கிட்டத்தட்ட 100 பேர் வரை தற்போது அந்தப் பணியில் ஈடுபடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.