தென்காசி மாவட்டம் ஆட்கொண்டார் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிராஜ்(25). இவர் ராணுவத்தில் வேலை பார்க்கிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காளிராஜ் சகுந்தலா(23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு 1 1/3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. காளிராஜ் வேலைக்கு சென்று விட்டதால் சகுந்தலா தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்த காளிராஜ் மீண்டும் பணிக்கு சென்றார்.

நேற்று சகுந்தலா திடீரென தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சகுந்தலா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்