நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருவிழாவை முன்னிட்டு இரண்டு நாட்கள் வேளாங்கண்ணி சுற்றுலா நடத்த தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 29ம் தேதி முதல் செப்டம்பர் எட்டாம் தேதி வரை திருவிழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலமாக 2 நாட்கள் வேளாங்கண்ணி சுற்றுலாவை ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 7 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றுலா பயணத் திட்டத்தில் முதல் நாள் இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மறுநாள்  இரவு 10 மணிக்கு பேருந்து சென்னை வந்தடையும். மூன்று வேலையும் உணவோடு  மற்றும்  உணவு இல்லாமல் என இரண்டு வகையான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கட்டணமில்லா தொலைபேசி எண் 180042531111 மற்றும் தொலைபேசி எண்கள் 044-25333333, 044-25333444 ஆகிய எண்களை தொடர்பு கொண்டும், வலைதள முகவரி www.ttdconline.com மூலமாகவும் விவரங்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.