
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மிகப்பெரிய ஜிடி மால் உள்ளது. இங்கு பொழுதுபோக்கிற்காக வரும் மக்களின் எண்ணிக்கை அதிகம்.
இங்கு கடந்த செவ்வாய்க்கிழமை முதியவர் ஒருவர் முன்பதிவு டிக்கெட்டுடன் படம் பார்ப்பதற்காக சென்றுள்ளார். அவர் தலைப்பாகையும், வேட்டியும் அணிந்து சென்றுள்ளார்.
அவருடைய தோற்றத்தை பார்த்து ஊழியர்கள் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து விவசாயிக்கு ஏற்பட்ட இந்த அவமரியாதைக்கு பல்வேறு தரப்பினரும் கன்னடங்களை தெரிவித்தனர். இதனால் அந்த ஷாப்பிங் மாலை 7 நாட்கள் மூடுமாறு கர்நாடக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் அந்த மால் ரூ. 1.78 கோடி வரிபாக்கி வைத்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக அந்த மாலுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.