
பெங்களூரில் உள்ள ஜிடி மாலுக்கு முதியவர் தன்னுடைய மகனோடு படம் பார்க்க சென்றுள்ளார். ஆனால் அவர் வேஷ்டி அணிந்திருப்பதாக கூறி மாலுக்குள் அவரை அனுமதிக்கவில்லை. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த நிகழ்வை கண்டித்து கன்னட அமைப்பினர்கள் அந்த மாலின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இந்த நிலையில் ஜி.டி வணிக வளாகத்தை ஏழு நாட்கள் மூடுவதற்கு கர்நாடக மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த மாலில் சென்று நடத்தப்பட்ட விசாரணையில் அந்த மால் 1.78 கோடி வரி செலுத்தாமல் இருந்ததும் தெரிய வந்ததையடுத்து அந்த வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.