
ஐ ஷோ ஸ்பீட் இவர் பிரபல யூட்யூபர். இவர் உலக அளவில் பிரபலமாக முக்கிய காரணம் உலக பிரசித்தி பெற்ற கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிர ரசிகர் ஆவார். அவர் குறித்த வீடியோக்கள் பதிவிட்டே மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை இவர் சம்பாதித்து விட்டார்.
இந்தியாவைப் பொருத்தவரையில் விராட் கோலி அவர்களுக்கு மிகப்பெரிய ரசிகன் என ஸ்பீட் கூறி வந்த நிலையில் இந்தியாவிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் அவ்வப்போது சில வித்தியாசமான சேட்டைகள் செய்து பலர் கவனத்தை ஈர்ப்பார். அவை சில நேரங்களில் காமெடியாக ரசிக்கும் படியும், பல நேரங்களில் ஆபத்தை விளைவிக்கும் விதமாகவும் அவரது வீடியோக்கள் அமைந்திருக்கும்.
அந்த வகையில், கூண்டுக்குள் அடைந்திருக்கும் சிங்கம் ஒன்றிடம் நாய் போல் குறைத்துக் காட்டி அதை வம்புக்கு இழுக்க எரிச்சலான சிங்கம் பதிலுக்கு கர்ஜிக்க பதறிப்போன youtuber speed சிங்கத்தின் காலில் விழுந்து தன்னை மன்னித்துக் கொள்ளுமாறு கெஞ்சும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
“>