கோவை தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை இன்று திமுக எம்.பி., கனிமொழி சந்தித்த பிறகு, விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக கூறி அவரை பேருந்து உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ளார். ஓட்டுநர் ஷர்மிளாவுடன் பேருந்து உரிமையாளர் வாக்குவாதம் செய்த நிலையில், பணி நீக்கம் செய்துள்ளார். இந்நிலையில் கனிமொழி பயணித்த போது டிக்கெட் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஷர்மிளா பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த செய்தியறிந்த கனிமொழி,  பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு வேறு வேலை, தேவையான உதவிகளை அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.  இதுகுறித்து பேசிய தனியார் பேருந்து உரிமையாளர், பெண் ஓட்டுனர் ஷர்மிளா தானாகவே விருப்பப்பட்டு பணியில் இருந்து விலகினார். அவரை நாங்கள் விலக சொல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.