
இந்தியாவில் பாஸ்போர்ட் இணையதளம் 3 நாட்களுக்கு இயங்காது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதாவது தொழில்நுட்ப காரணங்களால் ஆகஸ்ட் 29ஆம் தேதி இரவு 8 மணி முதல் செப்டம்பர் 2-ம் தேதி காலை 6: மணி வரை பாஸ்போர்ட் இணையதளம் இயங்காது. இதன் காரணமாக ஆகஸ்ட் 30ஆம் தேதி அனைத்து நேர்காணல்களும் ரத்து செய்யப்படுகிறது.
அன்றைய தினம் நேர்காணல் நடைபெற இருந்தவர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக மாற்று நேர்காணல் தேதி அறிவிக்கப்படும். மேலும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள பொது விசாரணை நேர்காணல் அலுவலகம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி மட்டும் செயல்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.