இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துவிட்டது. செல்போனுக்கு போலியாக மெசேஜ் மற்றும் லிங்க் போன்றவற்றை அனுப்புவதன் மூலம் மக்களை ஏமாற்றி வங்கி கணக்கில் இருந்து பணத்தை பறிக்கிறார்கள். அதோடு பல்வேறு விதமான மோசடி வேலைகளிலும் ஈடுபட்டு பொதுமக்களை ஏமாற்றி பணத்தை அபேஸ் செய்கிறார்கள். இந்த ஆன்லைன் மோசடிகளை தடுக்க அரசும் வங்கிகளும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தற்போது ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது ஆன்லைன் மோசடிகளை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள நிலையில் இன்று முதல் அமலுக்கு வருகிறது. குறிப்பாக மூன்று விதமான வங்கி கணக்குகள் இன்று முதல் முடக்கப்படும். அதன்படி முதலாவதாக செயலற்ற வங்கி கணக்குகள் முடக்கப்படும். அதன் பிறகு 2 வருடங்களாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் வங்கி கணக்குகள் மற்றும் அதற்கு மேல் எந்த ஒரு பரிமாற்றமும் நடக்காத வங்கி கணக்குகள் முடக்கப்படும்.

அதாவது ஆன்லைன் மோசடிகளில் ஈடுபடுபவர்கள் இந்த வகையான வங்கி கணக்குகளை தான் குறி வைக்கிறார்கள் என்பதால் இந்த கணக்கு முடக்கப்படும். இரண்டாவதாக கடந்த 12 மாதங்களுக்கு மேல் எந்தவிதமான பரிமாற்றமும் செயல்பாடுகளும் நடக்காத வங்கி கணக்குகள் முடக்கப்படும். எனவே கடந்த 12 மாதங்களாக வங்கிகளில் பரிமாற்றம் மேற்கொள்ளாத வாடிக்கையாளர்கள் உடனடியாக ‌ வங்கி கணக்குகளை புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வங்கி கணக்குகள் தேவையில்லாத சுமையை குறைக்கவும் ஆன்லைன் மோசடிகளை தவிர்க்கவும் முடக்கப்படுகிறது. இறுதியாக பூஜ்ஜிய பேலன்ஸ் மற்றும் நீண்ட காலங்களாக வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் கூட இல்லாமல் பூஜ்ஜிய கணக்கில் வைத்திருக்கும் வங்கி கணக்குகள் முடக்கப்படும். மேலும் இத்தகைய வங்கி கணக்குகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்கவும் மோசடிகளை தவிர்க்கவும்  முடக்கப்பட  இருக்கிறது