
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாக மெட்டா நிறுவனம் அடிக்கடி whatsapp செயலையில் புதுப்புது அப்டேட்டுகளை புகுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது ஜனவரி 1ஆம் தேதி முதல் சில குறிப்பிட்ட ஃபோன்களில் whatsapp செயலி இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆண்ட்ராய்டு கிட்கேட் அல்லது பழைய பதிப்புகளின் அடிப்படையில் whatsapp இயங்காது.
குறிப்பாக Samsung galaxy S3, S4 mini, note 2, Moto g, Moto razar HD, Moto E 2014, LG Nexus, LG G2 mini, Sony Xperia z, SP, V, HTC 1x,1x+ஆகிய போன்களில் whatsapp இயங்காது என்று கூறப்படுகிறது. இதே வித மே 5-ம் தேதி முதல் iOs 15.1 மற்றும் பழைய பதிப்புகளை பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில குறிப்பிட்ட ஃபோன்களில் whatsapp வேலை செய்யாது என்று வந்த தகவல் பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.