தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்கிறது. அதன்படி மொத்தம் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர இருக்கிறது. இந்நிலையில் வருடம் தோறும் செப்டம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்த்தப்படுவது வழக்கம். அந்த வகையில் செப்டம்பர் மாதம் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் அமலாக இருந்த சுங்கச்சாவடி கட்டணம் ஒத்திவைக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து தற்போது செப்டம்பர் மாதம் சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமலுக்கு வர இருக்கிறது. அதன்படி 5 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை சுங்கச்சாவடி கட்டணமானது உயர்கிறது‌. மேலும் இதனால் வாகன ஓட்டிகள் 5 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.