
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வீட்டு வசதி வாரியம் சார்பில் ஏழை, எளிய, நடுத்தர மற்றும் பொருளாதாரத்தை பின்தங்கிய மக்களுக்காக வீட்டுமனைகள் ஒதுக்கி வந்தது. இதற்காக அவர்களிடம் தவணை முறையில் பணம் வசூலிக்கப்பட்டது.
ஆனால் தவணை முறையில் பணம் வசூலிப்பதில் சிக்கல் இருப்பதாக கூறி அந்த முடிவை கைவிட வீட்டு வசதி வாரிய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த வருடம் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தவணை முறையில் பணம் வசூலிப்பதில் சிக்கல் இருப்பதால் வீட்டு வசதி வாரியத்திற்கு நஷ்டம் ஏற்படுகிறது.
இதனால் கூடுதலாக 20% வரை வீடுகளை விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் வீடுகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தவணை முறையில் வீடுகள் விற்பனை செய்வதை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.