
தமிழ்நாட்டில் முட்டை விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதாவது நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.90 ஆக உயர்ந்துள்ளது. இது வரலாற்று உச்சமாகும். கடந்த 15 நாட்களுக்கு முன்பு வரை ரூ.4.40-க்கு விற்கப்பட்ட முட்டையின் விலை திடீரென அதிகரித்துள்ளது.
இது வியாபாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் முட்டை ஏற்றுமதியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதன் காரணமாக சென்னையில் ஒரு முட்டையின் விலை 8 ரூபாய் வரையில் விற்பனை ஆகிறது.