கேரளாவில் உள்ள குண்ணங்கோடு பகுதியில் ஒரு தம்பதி தங்கள் குழந்தையுடன் காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்களின் மகளுக்கு 10 வயது இருக்கும். இவர்கள் வளைகுடா நாட்டில் வசித்து வரும் நிலையில் கலந்து சில தினங்களுக்கு முன்பாக கேரளாவுக்கு வந்துள்ளனர். இவர்களுக்கு மற்றொரு குழந்தை இருக்கும் நிலையில் அந்த குழந்தை அந்தப் பெண்ணின் தாய் வீட்டில் இருந்துள்ளது. இந்த குழந்தையை பார்ப்பதற்காக தான் அவர்கள் அனைவரும் காரில் சென்றனர். இவர்கள் ஒரு பகுதியில் காரை நிறுத்திவிட்டு ஷாப்பிங் செய்ய சென்றபோது அவர்களுடைய 10 வயது மகள் தூங்கிக் கொண்டிருந்ததால் காரில் ஏசி போட்டுவிட்டு அங்கேயே காரை நிறுத்திவிட்டு சென்றுள்ளனர்.

அப்போது அந்த காரை ஒருவர் திருடி விட்டு சென்ற நிலையில் அவர் குழந்தை தூங்குவதை கூட கவனிக்கவில்லை. அந்த தம்பதி தங்கள் மகள் காரில் இருந்ததால் கதறி அழுத நிலையில் அந்த பகுதியில் இருந்த சிலர் அவர்கள் சொன்ன அடையாளங்களை வைத்து உடனடியாக பின் தொடர்ந்து சென்றனர். கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு பிறகு தான் அந்த நபர் குழந்தை காருக்குள் இருப்பதை பார்த்துள்ளார். பின்னர் சாலையின் ஓரமாக அந்த சிறுமியை அவர் இறக்கிவிட்டு காரை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்ட நிலையில் அந்த சிறுமி அழுது கொண்டே இருந்துள்ளார்.

அப்போது அங்கிருந்தவர்கள் சிறுமியிடம் விசாரித்த நிலையில் அந்த இடத்திற்கு சிறுமையின் பெற்றோரும் வந்துவிட்டனர். அவர்கள் தங்கள் மகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த நிலையில் பின்னர் அதேசாலையில் வேகமாக சென்று காரை திருடி சென்றவரை ஒரு வழியாக மடக்கிப் பிடித்தனர். பின்னர் இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில் அவர் பெயர் அஜீஷ் (41) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் குடிபோதையில் இருந்த நிலையில் அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.