
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் நாட்டில் தொடங்கிய நிலையில் நேற்று உலகமே எதிர்பார்த்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதிய போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றனர். அதன் பிறகு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையிலிருந்து முதல் அணியாக பாகிஸ்தான் வெளியேறியுள்ளது. இந்த போட்டியை ஏராளமான பிரபலங்கள் துபாய்க்கு சென்று நேரில் கண்டு களித்தனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மும்பையில் சிஎஸ்கே ஜெர்சியுடன் ஒரு விளம்பரப்பட ஷூட்டிங்கில் ஈடுபட்டிருந்தார். அப்போது போட்டியின் நடுவே ஷூட்டிங்கை பாதியில் நிறுத்திவிட்டு மேட்ச் பார்க்க ஆரம்பித்தார். அவருடன் பல தொழில்நுட்ப கலைஞர்களுடன் இருந்தனர். அந்த சமயத்தில் பாலிவுட் நடிகர் சன்னி தியோல் அங்கு வந்தார். அவரைப் பார்த்தவுடன் தோனி எழுந்து நின்று கைகுலுக்கி வரவேற்றார். பின்னர் இருவரும் சேர்ந்து இந்தியா பாகிஸ்தான் போட்டியை கண்டு ரசித்தனர். மேலும் இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram
View this post on Instagram