கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் அருகே உள்ள ஒரு பகுதியில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். இவருக்கு சுதா (38) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இந்நிலையில் சுதா நேற்று முன்தினம் இரவு வெளியே சென்று விட்டு வீட்டிற்கு தன்னுடைய ஸ்கூட்டரில் திரும்பிக் கொண்டிருந்தார்.

இவர் புதுப்பாடி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அவருடைய கழுத்தில் இருந்த துப்பட்டா திடீரென ஸ்கூட்டரின் பின் சக்கரத்தில் சிக்கியது. இதில் ‌ கீழே விழுந்த அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.