
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது வேட்டையன் மற்றும் கூலி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. நடிகர் ரஜினிகாந்துக்கு திருமணம் ஆகி லதா என்ற மனைவியும், சௌந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இரு மகள்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யாவின் மகன் வீர்.
இவர் ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்று நேற்று அடம் பிடித்துள்ளார். இதனால் நடிகர் ரஜினிகாந்த் தன் பேரனை பள்ளிக்கு அழைத்து சென்றார். அதன்படி காரில் வீரை அழைத்து சென்ற நிலையில் பள்ளியில் சென்று விட்டார். நடிகர் ரஜினிகாந்த் வகுப்பறைக்கு நேரடியாக சென்றவுடன் அங்கிருந்த குழந்தைகள் அனைவரும் அவரை பார்த்தவுடன் மிகவும் கியூட்டாக ரியாக்சன் கொடுத்தனர். மேலும் இது தொடர்பான புகைப்படங்களை சௌந்தர்யா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த போட்டோஸ் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram