
மத்திய பிரதேஷ் மாநிலம் இந்தூர் பகுதியை சேர்ந்த அவியா பரித் ஷா ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். 15 வயது சிறுமியான இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு தனது தோழியின் காதலனை சந்திக்க சென்றுள்ளார். இது சிறுமியின் அக்காவிற்கு தெரிய வந்துள்ளது.
இதனால் சிறுமியை திட்டிய அவர் தந்தையிடமும் இது குறித்து கூறிவிட்டார். தந்தையும் கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையுடன் காணப்பட்ட சிறுமி அவியா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.