பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகள் மஞ்சள் நிறத்தில் இருப்பதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். அது எதனால் என்பதை எப்போதாவது யோசித்துப் பார்த்துள்ளீர்களா?, இந்த நிறம் ஆனது பளிச்சென்று இருப்பதால் இந்த வாகனத்தை பார்க்கும் மக்கள் பேருந்துக்குள்  மாணவர்கள் இருக்கிறார்கள் என்பதை எளிதில் உணர்ந்து கொள்வார்கள்.

மேலும் இந்த மஞ்சள் நிறமானது மழை மற்றும் பனிக்காலங்களில் கூட தெளிவாக தெரியும். ஒருவர் நேராக பார்க்காவிட்டாலும் ஓர கண்ணில் மஞ்சள் நிறம் தெரியும். முழுக்க முழுக்க மாணவர்களின் பாதுகாப்பிற்காகவே இந்த நிறம் பயன்படுத்தப்படுகின்றது.