கேரள மாநிலம் மலப்புறம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் சங்கரநாராயணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தற்போது 75 வயது ஆகும் நிலையில் காலமானார். இவரின் மரணம் அந்த பகுதியில் இருப்பவர்களை சோகத்தில் உள்ளாக்கியுள்ளது. ஏனெனில் இவரின் மனதின் வலிகளை யாராலும் ஈடு கட்ட முடியாது.

அதாவது கடந்த 2001 ஆம் ஆண்டு இவருடைய மகள் கிருஷ்ண பிரியாவுக்கு வயது 13. இந்த சிறுமி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது முகமது கோயா என்பவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டார். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த 2002 ஆம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தார்.

இவரை அதே வருடம் ஜூன் மாதம் 27ஆம் தேதி சங்கரநாராயணன் சுட்டுகொலை செய்தார். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் அவரை கோர்ட்டு விடுதலை செய்தது.

அதன் பிறகு வெளியே வந்த அவர் தன் வாழ்நாள் முழுவதும் வீட்டில் வாசலில் அமர்ந்து தன்னுடைய மகளின் புகைப்படத்தை வைத்து அழுது கொண்டே சொல்ல முடியாத துயரத்தில் வாழ்ந்து வந்துள்ளார். மேலும் இவரின் வலி எந்த ஒரு மனிதருக்கும் வரக்கூடாது என்று அந்த பகுதியில் இருப்பவர்கள் வேதனையோடு கூறியுள்ளனர்.