
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்பதை யாராலும் மாற்ற முடியாது என தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியுள்ளார். சென்னை திருவான்மியூரில் மத்திய அரசின் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழிசை சௌந்தரராஜன், நான் மருத்துவ பட்ஜெட் குறித்து பேச உள்ளேன்.
மத்திய அரசின் இந்த பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலை இருப்பதே சிலருக்கு பயமாகத்தான் உள்ளது. அவர் இருப்பதே எங்களுடைய கட்சிக்கு பலம் தான். திமுகவை ஒழிக்க நானும் அண்ணாமலையும் சேர்ந்து பயணிப்போம். பத்து வருடங்களுக்கு முன்பே பிரதமர் மோடி மக்கள் மருந்தகங்களை திறந்து விட்டார். இதை விட காப்பி அடிக்கிற ஒரு முதல்வரை இந்தியாவிலேயே பார்க்க முடியாது. ஸ்டிக்கர் ஸ்டாலின் என்பது முற்றிலுமாக இதன் மூலம் நிரூபணம் ஆகி உள்ளது. காவி தான் தமிழகத்தை ஆளப்போகிறது என்பதை யாராலும் மாற்ற முடியாது. தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று தமிழிசை சௌந்தர்ராஜன் சூழூரைத்துள்ளார்.