இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான திட்டங்களும் பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டியை உயர்த்தியுள்ளது. அதன்படி 180 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான வைப்புத் தொகைக்கான வட்டியை 0.25% அதிகரித்துள்ளது. இதனால் 180 நாட்கள் முதல் 210 நாட்களுக்கான வட்டி 6 சதவீதத்திலிருந்து 6.25% ஆகவும், 211 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்கு குறைவான நாட்களுக்கான வட்டி 6.25 சதவீதத்திலிருந்து 6.50 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.