
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 அன்று நடைபெற இருக்கிறது. இதனையடுத்து பக்தர்கள் பலரும் கோவில்களுக்கு புறப்பட துவங்கி விட்டனர். இதில் பலர் ஸ்ரீ ராமருக்கு என்று சில பொருட்களை கொண்டு செல்கின்றனர். அவ்வகையில் ஹைதராபாத் சேர்ந்த நாகபூஷன் ரெட்டி என்பவர் அயோத்தி ஸ்ரீ ராமருக்கு என்று பிரத்தியேகமாக லட்டு தயார் செய்துள்ளார்.
ஸ்ரீராம் கேட்டரிங் என்ற பெயரில் கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வரும் நாகபூஷன் ரெட்டி ராமருக்கு பிரத்தியேகமாக 1265 கிலோ எடையில் லட்டு தயார் செய்துள்ளார். இந்த லட்டுவை தயார் செய்வதற்கு 30 பேர் கொண்ட குழு தொடர்ந்து பணியாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
ஹைதராபாத்தில் இருந்து குளிரூட்டப்பட்ட பெட்டி மூலமாக லட்டு அயோத்திக்கு புறப்பட்டு உள்ளது. லட்டுவுடன் சேர்ந்து நாகபூஷன் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர், கேட்டரிங் நிறுவன ஊழியர்கள் என அனைவரும் நடைபயணமாக அயோத்திக்கு செல்கின்றனர்.