ஸ்லோ ஓவர் ரேட் குற்றத்திற்காக குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு பிசிசிஐ 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. நேற்று டெல்லி குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் பந்துவீச்சின் போது டெல்லி வீரர்கள் ரன் குவிப்பதை தடுப்பதற்காக குஜராத் அணி பந்து வீச நீண்ட நேரம் எடுத்து கொண்டதாக தெரிகிறது. இதனால் பிசிசிஐ குஜராத் தனி கேப்டன் சுப்மன் கில்லுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.