ரோஹித் சர்மா ரசிகர் ஒருவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொப்பியை எரித்த வீடியோ வைரலாகி வருகிறது..

வரவிருக்கும் ஐபிஎல் 2024 சீசனில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்ததால் ரசிகர்கள் கோபமடைந்தனர். இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 2024 தொடரில் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) கேப்டனாக ரோஹித் சர்மா மாற்றப்பட்ட பிறகு ரசிகர்கள் மகிழ்ச்சியடையவில்லை.  வரும் சீசனில் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது மும்பை அணி நிர்வாகம். ஏலத்திற்கு முன், ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணியின் கேப்டனாக 2 சீசன்களை கழித்த பிறகு மீண்டும் ட்ரேடிங் மூலம் மும்பை அணிக்கு வந்தார்.. 2022 ஐபிஎல் சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையில் குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணி கடந்த சீசனில் (2023 ஐபிஎல்) இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

இதையடுத்து மும்பை அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படலாம் என கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் தான் அதனை மும்பை அணி எக்ஸ் பக்கத்தில்  உறுதிப்படுத்தியது. மும்பை இந்தியன்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் கேப்டன் பாண்டியா என அறிவித்தது. மேலும் ரோஹித்தின் வீடியோவை வெளியிட்டு ரோ, 2013ல் எம்ஐயின் கேப்டனாக நீங்கள் (ரோஹித் சர்மா) பொறுப்பேற்றீர்கள். எங்களை நம்பச் சொன்னீர்கள். வெற்றி தோல்விகளில், எங்களை சிரிக்கச் சொன்னீர்கள். 10 வருடங்கள் & 6 கோப்பைகளுக்குப் பிறகு, இதோ. எங்களின் எப்பொழுதும் கேப்டனே, உங்கள் பாரம்பரியம் நீலம் மற்றும் தங்க நிறத்தில் பொறிக்கப்படும். நன்றி, கேப்டன் RO,”  என குறிப்பிட்டது.

ஆனால் இந்த அறிவிப்பை ரசிகர்கள் விரும்பவில்லை. நேற்று எடுக்கப்பட்ட முடிவு குறித்து ரோஹித்தின் ரசிகர்கள் கொந்தளித்தனர். இந்த அறிவிப்புக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் இன்ஸ்டாகிராமில் சுமார் 1.5 லட்சம் பின்தொடர்பவர்களை இழந்ததாக கூறப்படுகிறது. ட்விட்டரில் #ShameOnMI, #RohitSharma என்ற ஹேஸ்டேக்கில் ரோஹித் ரசிகர்கள் ரோஹித்தை புகழ்ந்தும், மும்பை அணி நிர்வாகத்தை விளாசியும் வருகின்றனர். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸின் தொப்பியை ஒரு ரசிகர் எரிப்பதைக் காணக்கூடிய வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது. “ரோஹித் ஷர்மா எதற்கும் மேல்” என அந்த வீடியோ தலைப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பகிரப்பட்டு வைரலாகி வருகிறது..

2013 இல், ரிக்கி பாண்டிங்கிடம் இருந்து மும்பை கேப்டனாக ரோஹித் பொறுப்பேற்றார் மற்றும் அணியின் அதிர்ஷ்டத்தை மாற்றினார். அவர் ஐபிஎல் அணிக்கு கேப்டனாக இருந்த 10 சீசன்களில், மும்பை இந்தியன்ஸ் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றது.

https://twitter.com/PoetVanity45/status/1735682392558625088