
வடமேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள ஹாமூன் புயல் தீவிர புயலாக மாறி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் நாளை பிற்பகலில் வடக்கு மற்றும் வடகிழக்கு வங்கதேசத்தில் உள்ள கெபுபாரா மற்றும் சிட்டகாங் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் ஒடிசா, மேற்கு வங்கம், மணிப்பூர், திரிபுரா, அசாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் சீக்கிரமாக காணப்படுவதால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது.