
திருவள்ளூர் மாவட்டம் அலமாதி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவருக்கு பானுமதி என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் குமார் சைதாப்பேட்டையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். குமாரின் வலது கழுத்து பகுதியில் ஒரு கட்டி இருந்தது. இதனால் கடந்த 14-ஆம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ஐந்தாவது மாடியில் உள்ள காது, மூக்கு, தொண்டை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு நேரம் குமார் ஜன்னல் அருகே சென்று திடீரென கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் படுகாயமடைந்த குமாரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு குமாரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.