பால்கர் மாவட்டம் போயிசர் பகுதியில் உள்ள TAPS மருத்துவமனையில் சிகிச்சைக்காக தனது கணவருடன் வந்த 70 வயது மூதாட்டி சயலதா அரேகர், டாக்டரின் கார் மோதியதால் உயிரிழந்த சோகமான சம்பவம் ஏப்ரல் 9ஆம் தேதி நிகழ்ந்தது. மருத்துவமனை வளாகத்திற்குள், முக்கிய நுழைவாயிலில் அவர் சாலையை கடக்க முயன்றபோது, கார் திடீரென மோதியதுடன், அவரை இழுத்துச் சென்றது. சம்பவத்தின் முழு நிகழ்வும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

 

சயலதா அரேகர், தனது கணவர் விஷ்வநாத் அரேகருடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்திருந்தார். வெளி நுழைவாயிலில் சாலை கடக்கும் நேரத்தில், ஒரு சிவப்பு நிற மாருதி எஸ்டிலோ கார் திரும்பியபோது, அவர் காரின் அடியில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார். அந்தக் காயங்களால் அவர் உடனடியாக உயிரிழந்தார். இந்த சோகமான காட்சிகள் சிசிடிவி வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டிய டாக்டரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இது போன்ற மருத்துவமனை வளாகங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதே பொதுமக்கள் வலியுறுத்தும் கோரிக்கையாக உள்ளது.