ஈரான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என அரசு அதிரடியாக உத்தரவிட்டது. கடந்த 2022-ஆம் ஆண்டு ஈரானில் ஹிஜாப் அணியவில்லை என கூறி 22 வயதிலும் பெண்ணை கைது செய்தனர். காவலில் இருந்தபோது அந்த பெண் உயிரிழந்தார். அதன் பிறகு அந்த நாட்டில் ஹிஜாப் கட்டுப்பாடுகளுக்கு எதிரான கடுமையான போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவி படிக்கிறார்.

ஈரானின் கடுமையான இஸ்லாமிய ஆடை கட்டுப்பாடுகளை எதிர்க்கும் பொருட்டு அந்த மாணவி தனது ஆடைகளை கலைந்து உள்ளாடைகளுடன் வந்தார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகள் அந்த மாணவியை கைது செய்தனர். அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும் மனநல பிரச்சனை உள்ளதாகவும் பல்கலைக்கழக செய்தி தொடர்பாளர் அமீர் கூறியுள்ளார்.