
ஈரான் நாட்டில் பெண்கள் மீதான அடக்குமுறை சட்டங்கள் இயற்றப்படுவது வேதனை அளிக்கும் விதமாகவும் பெண்களின் எதிர்காலம் என்பது கேள்விக்குறியானதாகவும் இருக்கிறது. அதாவது அந்த நாட்டில் ஹிஜாப் சட்டங்கள் கடுமையானதாக இருக்கிறது. சமீபத்தில் கூட ஒரு பல்கலைக்கழகத்தில் மாணவி ஹிஜாப் அணியவில்லை என்று கூறியதால் கோபத்தில் அந்த மாணவி உள்ளாடையுடன் பல்கலைக்கழகத்தில் வலம் வந்தார். அந்த மாணவியை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் பெண்கள் கண்டிப்பாக ஹிஜாப் அணிய வேண்டும் என்று தற்போது ஈரான் அரசு உத்தரவிட்டுள்ளது.
அதோடு ஹிஜாப் அணிய மறக்கும் பெண்களுக்காக புதிதாக மனநலன் சிகிச்சை மையம் ஒன்றினை திறக்கவும் அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாம். அந்த நாட்டில் பொது இடங்களில் கண்டிப்பாக பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்று சட்டம் இருக்கும் நிலையில் சமீப காலமாக பெண்கள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதன் காரணமாகத்தான் மனநலன் சிகிச்சை மையத்தை திறக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இது மனித உரிமை மீறல் என்று பலரும் அந்த நாட்டுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.