அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையில் கூறப்பட்ட குற்றச்சாட்டின் காரணமாக அதானி குழும நிறுவன பங்குகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதேபோல் உலகப் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அதானி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். இந்நிலையில் அதானி குழுமம் வெளியிட்டுள்ள 43 பக்க அறிக்கையில் கூறபட்டுள்ளதாவது, ஹிண்டன்பர்க்கின் அறிக்கை நன்கு ஆய்வு செய்யப்படவில்லை. மேலும் அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய வேண்டும் என்ற கெட்ட நோக்கத்துடன் இந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.