பொதுவாகவே சினிமாவை பொறுத்தவரை டாப் ஹீரோக்களுக்கு அதிக அளவில் சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஹீரோயின்களுக்கு குறைவாக தான் சம்பளம் கொடுக்கப்படுவதாக பல நடிகைகளும் குற்றம் சட்டி வருகிறார்கள். ஹீரோயின்கள் எந்த அளவிற்கு பாப்புலராக இருக்கிறார்களோ அந்த அளவிற்கு தான் சம்பளமும் வழங்கப்படுகிறது. நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 6 வருடமாக எந்தவொரு இந்திய படங்களிலும் நடிக்கவில்லை .

அமெரிக்காவில் செட்டிலான இவர் தற்போது மீண்டும் படத்தின் நடித்து வருகிறார். பிரியங்கா சோப்ரா ராஜமௌலி இயக்கத்தின் மகேஷ் பாபு நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் .இந்த படத்தில் இவருக்கு 30 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்படுகிறது. இவருக்கு அடுத்த இடத்தில் தீபிகா படுகோன் ஒரு படத்தில் நடிக்க 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.