தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமின்றி ப
‌பாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ராயன் என்ற படத்தை அவரை இயக்கி நடித்துள்ளார். இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நடிகர் தனுஷ் என்ற தன்னுடைய 41-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் கொடுத்த ஒரு பழைய பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் தனுஷ் தன்னுடைய உருவத்திற்காக பலமுறை கேலி செய்யப்பட்டுள்ளார். அதாவது காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தில் நடித்த போது நடிகர் தனுஷிடம் ஹீரோ யார் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் வேறொருவரை சுட்டிக்காட்டியுள்ளார். அதன் பிறகு அவர்தான் ஹீரோ என்று தெரிந்ததும் அவரை பலரும் கேலியும் கிண்டலும் செய்தனர். இதனால் மிகவும் உடைந்து போன தனுஷ் காருக்குள் உட்காருந்து பல மணி நேரமாக அழுதுள்ளார். மேலும் என்னை கேலி செய்யாத கிண்டல் பண்ணாத ஆளே கிடையாது என்று வேதனையுடன் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.