
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் முன்னணி நடிகர்களுடன் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மகாநடி என்ற படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலமாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா உள்ளிட்ட பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தெலுங்கு நடிகர் நிதின் ஹீரோவாக நடிக்கும் படத்தில், நெருக்கமான முத்தக்காட்சிகள் இருந்ததால் கீர்த்தி சுரேஷ் நடிக்க மறுத்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.