கேரள மாநிலம் கண்ணூர் அருகே இரிட்டி பகுதியில் ஹெல்மெட்டுக்குள் பதுங்கி இருந்த பாம்பு கடித்து ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரத்தீஷ்(40) என்பவர் தனது வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் ஹெல்மட்டை வைத்திருந்தார். வனத்துறையில் பணியாற்றும் தற்காலிக ஊழியரான இவர் பைக்கில் சென்று கொண்டிருந்த போது ஹெல்மெட்டுக்குள் இருந்த பாம்பு அவரை கடித்துள்ளது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்த அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டது.

ஹெல்மெட் உள்ளே இருந்த பாம்பை அவர் தூக்கி எறிந்ததால் என்ன பாம்பு கடித்தது என அடையாளம் காண முடியவில்லை. அதன் பிறகு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் அந்த பாம்பு விஷமற்ற மலைப்பாம்பு என மருத்துவர்கள் கண்டறிந்தனர்.