சமீப காலமாக சாலை விபத்துக்கள் மூலமாக உயிரிழப்புக்கள் மற்றும் பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே சாலை விபத்துகளை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு போக்குவரத்து துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஹெல்மெட் அணியாமல் வாகனங்கள் ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது.

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுவது வழக்கம். ஆனால், ஒரு நபருக்கு ஒரே நாளில் 2 முறை அதே காரணத்துக்காக அபராதம் விதிக்க 2016ஆம் ஆண்டு வாகன திருத்த சட்டத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தில் ஹெல்மெட் உள்ளிட்ட காரணங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டால், அதே காரணத்துக்காக, அதே நாளில் அபராதம் விதிக்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது