
மத்திய பிரதேச மாநிலம் கோபால் நகரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தன்னிடம் காவல் அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டதாகவும், தாக்கியதாகவும் 33 வயதுடைய பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது, நான் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தேன். அப்போது போலீசார் என்னை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து பணியில் இருந்த தலைமை காவலர் அதுல் என்பவர் தவறாக நடந்து கொண்டார்.
மற்றொரு காவலரான ஜிதேந்திரா அதனை வீடியோ எடுத்தார் என புகார் அளித்தார். இதேபோல தலைமை காவலர் அதுலும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரில் தலைக்கவசம் அணியாமல் வந்ததால் தான் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தினோம். அதற்காக தான் அந்த பெண் தகராறு செய்தார். எங்கள் மீது அந்த பெண் பொய் குற்றச்சாட்டுகளை கூறுகிறார் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இரு புகார்களின் அடிப்படையிலும் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.