நாட்டில் பலர் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள நிலையில் கடனை அடைக்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருவதால் தற்போது அரசாங்கம் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி உத்திரபிரதேசம் மாநிலத்தில் விவசாயிகளுக்காக கிஷான் கர்ஜ் மாஃபி யோஜனா என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் திட்டத்தின் கீழ் விவசாயிகள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த திட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் பல விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தொழில்நுட்ப காரணங்கள் காரணமாக பல்வேறு விவசாயிகளின் படங்களை தள்ளுபடி செய்ய முடியவில்லை என்று அந்த திட்டம் கைவிடப்பட்ட நிலையில், மத்திய அரசு வழங்கிய முன்மொழிவு காரணமாக கடந்த வருடம் தொடக்கத்தில் இந்த திட்டம் மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது தகுதி வாய்ந்த விவசாயிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது ஒரு லட்சம் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் 86 லட்சம் பேரில் கடன்களை தள்ளுபடி செய்வதை இந்த திட்டத்தின் நோக்கமாக அமைந்துள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.