தஞ்சாவூர் மாவட்டத்தில் முகமது சலீம் என்பவர் வசித்து வருகிறார்.இவர் வண்டிக்கார தெரு பகுதியில் ஒரு ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். இங்கு நேற்று முன்தினம் மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் ஆம்லெட் வேண்டும் என்று கேட்டனர். ஆனால் ஊழியர்கள் ஆம்லெட் இல்லை என்று சொல்லியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் கடையை அடித்து நொறுக்கினர். அவர்கள் கட்டைகளை எடுத்து அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியதோடு ஊழியர்களையும் தாக்கினர். இதில் உரிமையாளருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் இது தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வாலிபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.