உத்திரபிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் பிக்பூர் சர்க்கிள் அதிகாரியாக இருந்த டிஎஸ்பி கிருபா சங்கர் என்பவர் 2021 ஆம் வருடம் ஜூலை மாதம் குடும்ப காரணத்திற்காக விடுமுறை எடுத்திருந்தார். ஆனால் அவர் வீட்டிற்கு வராமல் அங்கே உள்ள ஒரு ஹோட்டலில்  பெண் போலீஸ் கான்ஸ்டபிள் உடன் இருந்துள்ளார். அப்பொழுது அவருடைய போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். அந்நேரம் தன்னுடைய கணவரின் போன் சுவிட்ச் ஆப் ஆக இருப்பதால் சந்தேகப்பட்ட மனைவி தன்னுடைய கணவனை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளார்.

அப்பொழுது டிஎஸ்பி கிருபா சங்கர் செல்போன் நெட்வொர்க்கை சோதித்த பொழுது, ஹோட்டலில் அவருடைய நெட்வொர்க் செயலிழந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். ஹோட்டலுக்கு விரைந்த காவல்துறையினர் ஒரே அறையில் இருந்த டிஎஸ்பி மற்றும் பெண் கான்ஸ்டபிள் இருவரையும் கையும் களவுமாக பிடித்தார்கள். இந்த விவகாரம் குறித்த விசாரணை நடத்திய உத்திர பிரதேச அரசு டிஎஸ்பி கிருபா சங்கரை கான்ஸ்டபிள் ஆக பதிவி இறக்கம் செய்ய பரிந்துரை செய்துள்ளது.