புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி புறவழிச்சாலையில் இருக்கும் ஹோட்டலில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு ஹோட்டலுக்கு 3 பேர் சாப்பிடுவதற்காக சென்றனர். அப்போது சரவணன் உணவு முடிந்து விட்டதாக தெரிவித்தார். இதனால் அவர்கள் அங்கிருந்து சென்றனர்.
இதனை தொடர்ந்து வேலை முடிந்து சரவணன் வீட்டிற்கு சென்றார். அப்போது 3 பேரும் சரவணனை வழிமறித்து தாக்கியுள்ளனர். இதுகுறித்து சரவணன் கீரனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வீரமணி, மதுரை சேர்ந்த 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.