நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பாக்கம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதுவிதமான திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.

அதன்படி மொபைல் நெட்வொர்க் சேவையை அளிப்பது போல மலிவு விலை 4ஜி செல்போன்களையும் ஜியோ விற்று வருகிறது. அந்த வரிசையில் JIOBHARAT J1 என்ற பெயரில் புதிய 4g போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை 2999 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. ஆனால் அறிமுக சலுகையை 1799 ரூபாய்க்கு இந்த போனை விற்பனை செய்கிறது. 2500 Mah பேட்டரி திறனும், 2.8 இன்ச் திரையும் கொண்டுள்ளது. மெமரியை 128 ஜிபி வரை நீட்டிக்க முடியும்.