இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல்வேறு வீடியோக்கள் அதிர்ச்சியூட்டும் விதமாக வெளி வருகிறது. அவ்வாறு வெளியான ஒரு வீடியோ இந்தியாவின் கிராம புறத்தில் நடந்த கொடூரமான பாலியல் சம்பவத்தை வெளிப்படுத்தி உள்ளது. மிகவும் வைரலான இந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் வெட்கமின்றி ஒரு சிறுமியை தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த அருவருப்பான காட்சிகள் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதோடு நாட்டில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தை பார்த்த சில பெண்கள் மிகவும் தைரியமாக செயல்பட்டுள்ளனர். பாலியல் தொல்லை செய்த அந்த மனிதனை எதிர்த்து கற்களால் அடித்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

அதனால் அந்த மனிதன் தப்பி ஓடினான். பெண்களின் இந்த தைரியமான செயல் பாராட்டப்பட்டாலும் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டதாகவும் சிலர் விமர்சித்துள்ளனர்.மேலும் இந்த சம்பவம் கிராமப்புற இந்தியாவில் பெண்கள் எதிர் கொள்ளும் சவால்கள் வெளிப்படுத்தி உள்ளது.