தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அவருடைய கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை என்பது நடைபெற்று வருகிறது. ஒரு செயலி மூலமாக உறுப்பினர் சேர்க்கை என்பது நடைபெற்று வரும் நிலையில் பலர் கட்சி நிர்வாகிகளை நேரில் சென்று சந்தித்து இணைகிறார்கள். அந்த செயலி மூலமாக மட்டுமே இதுவரை ஒரு கோடி பேர் கட்சியில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் பெரியதாழை  மீனவ கிராம மக்கள் தமிழக வெற்றி கழகத்தில் ஒட்டுமொத்தமாக இணைந்துள்ளனர்.

பெரியதாழை மீனவ கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அந்த கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் களத்தி இறங்கி அதிரடியாக பணி செய்து வரும் நிலையில் அவர் கட்சியில் உறுப்பினர்களை சேர்ப்பதில் அதிதீவிரம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.